Complaint ID   C8307100

complaint sender image Anonymous Shared Publicly on Feb 13, 2017 

காஞ்சியில் மாடுகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் தாக்கம்?

கிராமப்புறங்களில், மாடுகளுக்கு, தொண்டை அடைப்பான் நோய் தாக்கம் காணப்படுகிறது. இதனால், மாடுகள் இறக்க நேரிடுகின்றன என, கால்நடைகளை பராமரிப்போர் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் கால்நடை உதவி கோட்டத்தின் கீழ், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், தண்டலம் காலனி, புரிசை, கொட்டவாக்கம் காலனி உள்ளிட்ட பல கிராமங்களில், சில தினங்களுக்கு முன், 'ஆந்தராக்ஸ்' எனப்படும் கொடிய நோயால், மாடுகள் இறந்தன. அதை தொடர்ந்து, பள்ளம்பாக்கம் காலனியில், இரு தினங்களுக்கு முன், தொண்டையடைப்பான் நோயால், கன்று குட்டி இறந்துள்ளது.

இந்த நோயை தடுக்க, கால்நடை துறையினர், தடுப்பூசி மற்றும் பிற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Sender Status
 
Ward Member Status
 
Sender Detail
 
NA
NA
Address NA