Complaint ID   C7788175

complaint sender image Anonymous Shared Publicly on Nov 19, 2017 

கடப்பாக்கம் ECR சந்திப்பில் நடைபெற காத்திருக்கும் மிகப்பெரிய விபத்து, தடுக்குமா இடைக்கழிநாடு பேரூராட்சி !

complaint image

இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு எதிரில் சென்னை மற்றும் புதுச்சேரி செல்லும் பேருந்துகள் நின்று செல்ல 2 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகள் நிற்க போதுமான இட வசதி கிடையாது. எனவே பயணிகள் அனைவரும் சாலையிலேயே பேருந்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

மேலும் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள், அருகிலுள்ள இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவகத்திற்கு வருபவர்கள், இந்தியன் வங்கி ATM பயன்படுத்த வருபவர்கள் சாலையிலேயே தங்கள் வாகனத்தை நிறுத்துவதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்.

மேலும் பேருந்து நிறுத்தத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகளின் பேனர்களும் 2 மாதங்களுக்கு மேலாகியும் தொடர்ந்து இருப்பதால் இட பற்றாக்குறை நிலவுகிறது.

மேலும் Indian Oil எரிபொருள் நிறுவனத்தின் இரும்பு விளம்பர தடுப்பும் பயணிகளுக்கும், சாலையை கடக்கும் வாகன பயன்பாட்டாளர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகின்றன.

மேற்கூறிய காரணங்களால் கடப்பாக்கம் ECR பகுதியில் தினமும் பல சிறிய விபத்துகளும், சில சமயங்களில் பெரு விபத்துகளும் நடந்தவண்ணம் உள்ளது.

மேலும் இப்பகுதியில் பல்வேறு பள்ளிகள் உள்ளதால் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த சாலைகளை கடக்கின்றனர். அவர்களும் இந்த பகுதியை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.

பெரும்பாலான மக்கள் இந்த பிரச்சினையை சிறிய ஒன்றாகவே கருதுகின்றனர். ஆனால் ஒரு வேளை சாலையில் வேகமாக பயணிக்கும் ஒரு PRTC அல்லது ரதி மீனா பேருந்தோ அல்லது ஒரு செங்கல் லாரியோ அங்கே நின்றுகொண்டிருக்கும் பயணிகள் மீதோ அல்லது அந்த வழியாக செல்லும் மாணவர்கள் மீதோ, திசை மாறி சென்றால் என்னவாகும்! அதில் நம் சொந்தங்களும் இருந்தால் என்னவாகும்! எனவே அதுபோன்ற பெருவிபத்து ஏற்படும் முன்பு நம் இடைக்கழிநாடு பேரூராட்சி - பயணிகள் பாதுகாப்பாக நிற்க இடவசதி செய்து தருமாறு பொதுமக்கள் சார்பாகவும், மக்கள் நலனில் அக்கறைகொண்ட அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு,

இடைக்கழிநாடு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள்.

குறிப்பு: இது புகார் அல்ல, மக்கள் நலனில் அக்கறை கொண்ட இடைக்கழிநாடு பேரூராட்சி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துவருவது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த பணிகளுடன், மக்கள் உயிரை பாதுகாக்கும் இந்த செயலையும் செய்யவேண்டும் என்ற கோரிக்கையே.

மக்களின் உயிர் காக்க உதவுமா இடைக்கழிநாடு பேரூராட்சி !

Sender Status
 
Ward Member Status
 
Sender Detail
 
NA
NA
Address NA