Complaint ID   C7771100

complaint sender image Anonymous Shared Publicly on Feb 17, 2017 

சேத்துப்பட்டு கிராமத்தில் தெரு விளக்குகள் சேதம்: கிராம மக்கள் சிரமம்

வர்தா புயலால் சேதமடைந்த தெரு விளக்குகள் இதுவரை சீரமைக்கப்படாததால், சேத்துப்பட்டு கிராமம் இரண்டு மாதங்களாக இருளில் மூழ்கியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த குன்றத்தூர் ஒன்றியம், சேத்துப்பட்டு கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் வீசிய வர்தா புயலால், சேத்துப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கர் நகர், கன்னியம்மன் கோயில் தெரு, இருளர் காலனி, சபரி நகர் ஆகிய பகுதிகளில் இருந்த பல மின் கம்பங்கள், தெரு விளக்குகள் சேதமடைந்தன.
இந்த நிலையில், மின் வாரிய அதிகாரிகள் மூலம் சாய்ந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இரண்டு மாதங்களாகியும், இந்தப் பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், சேத்துப்பட்டு கிராமம் இருளில் மூழ்கியுள்ளது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இரவு நேரங்களில் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், இருள் சூழ்ந்துள்ளதால், சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

எனவே, இந்தப் பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தெருவிளக்குகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sender Status
 
Ward Member Status
 
Sender Detail
 
NA
NA
Address NA