Complaint ID   C7290100

complaint sender image Anonymous Shared Publicly on Feb 13, 2017 

திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் பகுதியில் விபத்து ஏற்படுத்தும் 4 வழிச்சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, நான்கு பகுதிகளுக்கு பிரிந்து செல்லும் கூட்டுச்சாலையில் தானியங்கி சிக்னல் மற்றும் வேகத்தடை இல்லாததால், தினமும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கனகம்மாசத்திரம் பஜார், திருவாலங்காடு, திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு இடங்களுக்கு சாலை பிரிந்து செல்கிறது.

இந்த நான்குவழி பிரியும் சாலையில், 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றவாறு இருக்கும். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் சாலையை கடக்கும் போது, வாகனங்கள் ஒன்றோடு ஒன்று விபத்துக்குள்ளாகி பலர் இறந்துள்ளனர்.

கடந்தாண்டில் மட்டும், இந்த நான்குவழி சாலையில், விபத்தில், ஏழு பேர் இறந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர். இரவு நேரத்தில் மட்டும் போலீசார் நான்கு வழி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகனங்களை முறைப்படுத்தி அனுப்புகின்றனர். பகல் நேரத்தில் போலீசார் அங்கு யாரும் பணியில் இருக்க மாட்டார்
கள். இதனால், நான்குவழி சாலையில் வாகனங்கள் முறைப்படி கடந்து செல்லாமல், அவசரம், அவசரமாக கடந்து செல்லும் போது வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன.

இதுவரை அங்கு வேகத்தடை, தானியங்கி சிக்னல் அமைக்காததால் தான் விபத்து ஏற்படுகிறது.
எனவே, வாகன ஓட்டி கள் நலன் கருதி நான்கு வழிச் சாலையில் சிக்னல், வேகத்தடை மற்றும் போலீசார் அங்கு நின்று போக்குவரத்துகளை சீரமைக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.

Sender Status
 
Ward Member Status
 
Sender Detail
 
NA
NA
Address NA