Complaint ID   C5725100

complaint sender image Anonymous Shared Publicly on Feb 13, 2017 

திருத்தணி: திருவாலங்காடு ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணி தாமதம்

ஊராட்சியில், 30 லட்சம் ரூபாய் செலவில் தார்ச் சாலை அமைக்க டெண்டர் விட்டு பல மாதங்கள் ஆகியும் பணிகள் துவங்காததால், அப்பகுதி வாசிகள் ஆணையரிடம் புகார் மனு கொடுத்து, விரைந்து முடிக்க வலியுறுத்தினர்.

திருவாலங்காடு ஊராட்சியில், வடாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றிலும் உள்ள ஊராட்சி சாலை, பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியிருந்தது. இதையடுத்து, ஒன்றிய நிர்வாகம், கோவிலை சுற்றிலும் உள்ள தார்ச் சாலையை சீரமைக்க, 30 லட்சம் ரூபாய், கடந்தாண்டு ஒதுக்கீடு செய்து, பணிகளுக்கு டெண்டரும் விட்டது.
ஆனால், ஒப்பந்ததாரர் பல மாதங்கள் ஆகியும் பணிகளை துவங்காததால் அப்பகுதி வாசிகள் மற்றும் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று, திருவாலங்காடு ஊராட்சி வாசிகள், 15க்கும் மேற்பட்டோர் ஒன்றிய ஆணையரை நேரில் சந்தித்து மனுகொடுத்தனர்.

மனுவில், கோவிலை சுற்றியுள்ள ஊராட்சி சாலைப்பணிகள் துவங்காமல் உள்ளனர். விரைவில், வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா மற்றும் கமலத்தேர் திருவிழா நடைபெற உள்ளது.

ஊராட்சி சாலையில் தான் கமலத்தேர் செல்ல வேண்டியுள்ளதால், சாலைப் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, ஆணையரிடம் ஒப்பந்ததாரரை அழைத்து பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என
அறிவுறுத்தினர்.

Sender Status
 
Ward Member Status
 
Sender Detail
 
NA
NA
Address NA