Complaint ID   C2528100

complaint sender image Anonymous Shared Publicly on Feb 13, 2017 

வாலாஜாபாத் பேரூராட்சியில், குடிநீர் தட்டுப்பாடு

வாலாஜாபாத் பேரூராட்சியில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், நகரவாசிகள் வீதியில் இறங்கி போராட உள்ளனர்.
வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில் எட்டு, ஒன்பது, 12வது வார்டுகளில், குடிநீர் வினியோகம் சரியாக இல்லை என, நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த வார்டுகளைச் சேர்ந்தவர்கள் சிலர், பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் பேரூராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதனால், வாலாஜாபாத் பேரூராட்சி நகரவாசிகள் சிலர் வீதியில் இறங்கி போராடுவதற்கும் முடிவு செய்துள்ளனர்.

பேரூராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும், 5ம் எண் கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்தது. அதை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்து வருகிறோம். இருப்பினும், எந்த தெருவில் குடிநீர் வரவில்லை என, ஆய்வு செய்து, முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

-பேரூராட்சி செயல் அலுவலர், வாலாஜாபாத்.

Sender Status
 
Ward Member Status
 
Sender Detail
 
NA
NA
Address NA